உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் சாலை விபத்துகள் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் சாலை விபத்துகள் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில், 5ம் தேதி ஒரே நாளில் நடந்த பல்வேறு விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்தனர். வடமதுரை அருகே நல்லுார் குரும்பபட்டியைச் சேர்ந்த சின்னையா, 60, ரஞ்சிதம், 58, தாரணிகா, 7, மவுனிகா, 6, ஆகியோர் டூ - வீலரில் திருமலைக்கேணியில் இருந்து வீட்டிற்கு சென்ற நிலையில் குருநாதபுரம் அருகே வரும்போது, பின்னால் வந்த கார் மோதி, தாரணிகா, சின்னையா இறந்தனர் . பழநி புதுநகரில் வசித்த திருநெல்வேலியை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., அப்துல்கபூர், 52, டூ - வீலரில் நான்கு வழிச்சாலை தாழையூத்து அருகே செல்லும்போது, பின்னால் வந்த கார் மோதி, இறந்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் வெங்கடேசன், 30, என்பவர் காரில் தாழையூத்து சப்பளிநாயக்கம்பட்டி அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதியதில் இறந்தார். ஏ.வெள்ளோடு அண்ணாமலையார் மில் காலனியை சேர்ந்த ஜெரால்ட் பிரிட்டோ, 49, திருகம்பட்டி பிரிவு அருகே பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். 'சாலை விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், போலீசார் துரித தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை