திண்டுக்கல் வழிப்பறி; கொள்ளையனுக்கு கை முறிவு
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் 15 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை போலீசார் பிடிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் வலது கை முறிந்தது.திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் கதிரியன்குளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் 36. நடந்து செல்வோர்,டூவீலர்களில் செல்வோரை மறித்து அவர்களிடமிருந்து அலைபேசி,நகைகளை பறித்து சென்றது உட்பட இவர் மீது வடமதுரை,எரியோடு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 15க்கு மேலான வழக்குகள் உள்ளன.தலைமறைவாக இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற மக்கான் தெருவை சேர்ந்த முகமதுசபியுல்லாவை தாக்கி ரூ.ஆயிரத்தை வழிப்பறி செய்தார்.வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,சரத்குமார் தலைமையிலான போலீசார் பழநி ரோட்டில் பதுங்கியிருந்த ராஜசேகரை பிடிக்க முயன்றனர். தப்பிக்க முயன்ற ராஜசேகர் வாய்க்காலில் தவறி விழுந்ததில் வலது கை முறிந்தது. அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.