உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்களுக்கு வழங்கல தீபாவளி டிவிடெண்ட் அதிருப்தி; கூட்டுறவு சங்கங்கள் கை விரித்ததால் பரிதவிப்பு

ஆசிரியர்களுக்கு வழங்கல தீபாவளி டிவிடெண்ட் அதிருப்தி; கூட்டுறவு சங்கங்கள் கை விரித்ததால் பரிதவிப்பு

மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருவதும், நாணய சங்கத்தில் சேமிப்பும் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டு வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆசிரியர்கள் செலுத்தும் டெபாசிட்களுக்கு வட்டியாக அந்தந்த ஆண்டு தீபாவளிக்கு டிவிடெண்ட் வழங்கப்படும். ஒரு நபருக்கு குறைந்தது ரூ. 10000 முதல் 20 ஆயிரம் வரை அவரவர் சேமிப்பு, டெபாசிட் ஏற்ப வழங்கப்படும். 30 ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வரும் நிலையில் இந்தாண்டு மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் டிவிடெண்ட் வழங்கவில்லை. சங்கங்களில் கேட்டால் மாநிலம் முழுவதும் தணிக்கை நடந்து வருவதால் தற்போது வழங்க இயலாது என கை விரித்து விட்டதாக கூறுகின்றனர். இதை நம்பி தீபாவளி கொண்டாடயிருந்த பலரும் பரிதவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி