உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அக்.20ல் மாவட்ட கலைப்போட்டிகள்

அக்.20ல் மாவட்ட கலைப்போட்டிகள்

திண்டுக்கல்: கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அக். 20 ல் நடைபெறுகிறது.கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டி நடத்தப்படுகிறது. மாவட்ட ,மாநில போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவ்வகையில் 5--8, 9--12, 13--16 என்ற வயது பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் , கிராமிய நடன போட்டிகள் அக். 20 ல் நடக்கிறது.இப்போட்டிக்காக திண்டுக்கல் முனிச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 :00மணி முதல் முன்பதிவு நடைபெறுகிறது. விவரங்களுக்கு 0452-2 566 420, 97900 70867 ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை