மேலும் செய்திகள்
வளையப்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
22-Sep-2025
திண்டுக்கல்: மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் சுழற் கோப்பையை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியும், வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் பெற்றது. திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் , கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் 10ம் ஆண்டு சின்னாபிள்ளை ராஜாமணியம்மாள் நினைவு மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் அக் 11,12 ல் நடைபெற்றது. 30க்கு மேற்பட்ட பள்ளியில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் சுழற் கோப்பையை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மாணவியர்களுக்கான கோப்பையை வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது. 12 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் கே.கே.ஏ.ஜி., பள்ளி மாணவர் சாத், இரட்டையர் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முகிலன்- ஈர்வேஷ் , 14 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மித்ரன், இரட்டையர் பிரிவில் கவியரசு- மித்ரன், 18 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சுகுமார், இரட்டையர் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி லாரன்ஸ் மைகேல் ஜோ- சச்சின், 12 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ரகிபா,இரட்டையர் பிரிவில் எஸ்.எம்.பி.எம்., பள்ளி ஷ்ரவந்தி, புனித வளனார் பள்ளி பிரகதி, 14 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருணாம்பாள். இரட்டையர் பிரிவில் அருணாம்பாள்- யுவஸ்ரீ, 18 வயது மாணவியர் ஒற்றைப் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி லாவண்யா, இரட்டையர் பிரிவில் லாவண்யா-வர்சாலினி முதல் பரிசுகளை பெற்றனர். இதற்கான பரிசளிப்பு விழா பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் மாவட்ட கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகிகள் புருஷோத்தமன், தாளாளர் சித்தாந்த் முதல்வர் மாதுரி, கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அர்ஜூனன், பாண்டி, மணிகண்டன், தீபேஸ் பட்டேல், ரோட்டரி சங்க தலைவர் சிவா, செயலாளர் ஜெயக்குமார் பரிசு வழங்கினார். போட்டி நடுவராக நாகேஸ்வரன், விசாலி இருந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்தனர்.
22-Sep-2025