உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்ட கிரிக்கெட் போட்டி

மாவட்ட கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., தெற்கு ஒன்றிய மாணவர் அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அங்கிங்கு மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் 24 அணிகள் விளையாடின. எம்.எல்.ஏ., செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாணவரணி துணை அமைப்பாளர் சூசைராபர்ட் வரவேற்றார்.திண்டுக்கல் ஏ.எம்.சி.சி.அணி வெற்றி பெற்றது. 2 ம் பரிசை அம்பாத்துரை தாமரை சி.சி. அணி, 3 ம் பரிசை வெள்ளோடு பிராவோ சி.சி., அணி, கள்ளிப்பட்டி எவரெஸ்ட் சி.சி., அணி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை