மேலும் செய்திகள்
மின்தடை ரத்து
14-Oct-2025
ஒட்டன்சத்திரம்: மாவட்ட ரோல் பால் ஸ்கேட்டிங்கில் ஒட்டன்சத்திரம் வேந்தன் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ரோல் பால்ஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் ஒட்டன்சத்திரம் வேந்தன் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர், வீராங்கனைகள் பல்வேறு வயது, பிரிவுகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி சான்றிதழ், பதக்கம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். தலைமை பயிற்சியாளர் பிரேம்நாத், வேந்தன் ஸ்போர்ட்ஸ் அகாடமி உரிமையாளர் ரேணுகாதேவி, பயிற்சியாளர்கள் கணேஷ் பாபு, கல்யாணராமன் வாழ்த்து தெரிவித்தனர்.
14-Oct-2025