மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழா
14-Jan-2026
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில், நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ரங்கசாமி துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட சங்கத் தலைவர் ராஜகோபால், செயலாளர் செந்தில், பொருளாளர் பாலாஜி, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி, தேசிய வில்வித்தை பயிற்சியாளர் பழனிச்சாமி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 10, 12, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட னர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
14-Jan-2026