உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாவட்ட பளுதுாக்கும் போட்டி 

 மாவட்ட பளுதுாக்கும் போட்டி 

திண்டுக்கல்: திண்டுக்கல் ரோட்டரி சங்கம், மேற்கு ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம் ,திண்டுக்கல் ஜிம் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து மாவட்ட பளு தூக்கும் போட்டி நடத்தியது. திண்டுக்கல் தனியார் மஹாலில் நடந்த போட்டியில் 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 180 வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதிக பதக்கங்களை வென்று முதல், இரண்டாம் இடம் பெற்ற ஜிம்மிற்கு ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பை வழங்கப்பட்டது. ஒவ்வொரு எடை பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் களுக்கு 'ஸ்ட்ராங் மேன்' விருதுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை சுந்தரராஜன் துவக்கி வைத்தார். துணை ஆளுநர் சண்முகம் பேசினார். ரோட்டரி சங்க தலைவர்கள் மகேந்திரன், சிவா, செந்தில்குமார், செயலாளர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், ரெங்கையா, நிர்வாகிகள் கலைச்செல்வன், ரஞ்சித், ஜெகத் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை