தீபாவளி பரிசு வழங்கல்
திண்டுக்கல், : தினசரி நாளிதழ் விநியோகஸ்தர்கள் நல சங்க உறுப்பினர்கள் 77, அவர்களது குடும்பத்தினர், மின்மயான அறக்கட்டளையில் பணியாற்றும் 12 பேர் ,தென்னம்பட்டி அரசு பள்ளி ஏழை மாணவர்கள் 21 பேருக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் , பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.தலைவர் புருசோத்தமன் தலைமையில் நடந்த இதில் மேஜர் டோனர் சுந்தரராஜன், நாதன், அரசன் சண்முகம் வழங்கினர். நாதன்,சுப்புராம் கலந்து கொண்டனர். ரோட்டரி செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்,