உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

கோபால்பட்டி: கோபால்பட்டியில் தி.மு.க., கூட்டணி சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராமகிருஷ்ணன், ராஜ்கபூர், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலகுரு, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் டாக்டர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். நத்தம், செந்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, இடையகோட்டை, தொப்பம்பட்டி, வேல்கரைப்பட்டி, பொருளூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், பாலு, பொன்ராஜ், சுப்பிரமணி, தங்கம், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி , கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பழநி : சிவகிரிப்பட்டி பகுதியில் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் தலைமை வைத்தார் .பழநி நகர செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர். பாப்பம்பட்டி, சின்ன கலையம்புத்துார் , மேல் கரைப்பட்டி நால்ரோடு, தொப்பம்பட்டி, பொருளூர் குதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள் செல்வன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி