உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்-

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்-

நத்தம் : நத்தம் சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்களுக்காக கூட்டம் நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், சேக் சிக்கந்தர்பாட்சா, பழனிச்சாமி, வெள்ளிமலை, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு டிஜிட்டல் ஏஜன்ட் மூலம் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், ஓட்டுச்சாவடிகளில் முகவர்கள் செயல்படும் விதம் குறித்தும் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி