உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாக்டர்கள் போராட்டம்; போலீசார் குவிப்பு

டாக்டர்கள் போராட்டம்; போலீசார் குவிப்பு

திண்டுக்கல்; டாக்டர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு டாக்டரை கத்தியால் வெட்டியதை கண்டித்தும் , கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவசரகால சேவைகள்,உயிர்காக்கும் நடைமுறைகள் தவிர அனைத்து புறநோயாளிகள் பிரிவு சேவைகள்,அறுவை சிகிச்சைகள்,கூட்டங்கள்,மாணவர்களின் வகுப்புகள் நடத்தப்படாது என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்தது. அதனடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் புறநோயாளிகள் பிரிவு சேவைகள்,அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அசாம்பாவித சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக 50க்கு மேலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை