உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துரத்தி கடிக்கும் நாய்கள்....சேதமான ரோடுகள்... அல்லாடும் பழநி 8 வது வார்டு மக்கள்

துரத்தி கடிக்கும் நாய்கள்....சேதமான ரோடுகள்... அல்லாடும் பழநி 8 வது வார்டு மக்கள்

பழநி: சேதமான ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றி சுற்றி திரியும் நாய்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் சிக்கி பழநி நகராட்சி 8 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.பழநி நகராட்சி பகுதியில் 8 வது வார்டு நகரின் முக்கிய பகுதியான மேற்குரத வீதி, ஆரியர் தெரு, மங்கலம் தெரு, நடுத்தெரு, பச்சமுத்து சந்து, அய்யனாரப்பன் சந்து, பழனிச்சாமி வீதி, திரு.வி.க வீதி, முத்துலிங்கசாமி சந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் ரோடுகள் சேதமாக இருப்பதால் மக்கள் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். 8வது அங்கன்வாடி மையம் சேதமானதால் அங்கு படிக்கும் குழந்தைகள் எந்நேரமும் அச்சத்தில் உள்ளனர். நகரின் கோயில்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராபொருத்தப்பட வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். சேதமான தெரு விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

நாய்கள் தொல்லை

பூரணி, காளாஸ்திரி சந்து: இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம். டூவீலர்களில் செல்லும் போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் முதியோர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.

சாக்கடைகள் துார்வார வேண்டும்

ஜெயந்தி, தனியார் ஊழியர்,ஆரியர் தெரு: சாக்கடைகள் துார்வார வேண்டும். கொசு மருந்து முறையாக அடிக்க வேண்டும். ஜிகா பைப் லைனில் தினமும் தண்ணீர் வழங்க வேண்டும். ரேஷன் கடை விரைவில் திறக்கப்பட வேண்டும்.

ரோடு கள் சீ ரமைக்க வேண்டும்

தனகோபால்,முத்துலிங்க சுவாமி சந்து: பாதாள சாக்கடை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது. சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். கோயில்கள் அதிகம் உள்ளதால் வெளிநபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

நடவடி க்கை எடுக்கப்படும்

இந்திரா, கவுன்சிலர்,(தி.மு.க.,): எனது வார்டில் குடிநீர் வசதி,ரோடு வசதி சரியாக உள்ளது. குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். சேதமான ரோடு விரைவில் அமைக்கப்படும். புதிய ரேஷன் கடை கட்டப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ