உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாடுகளை வெளியே அனுப்பாதீங்க: கால்நடை அறிவுரை

மாடுகளை வெளியே அனுப்பாதீங்க: கால்நடை அறிவுரை

வடமதுரை : வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியே விட வேண்டாம் என கால்நடைத்துறையினர் அறிவுருத்தி உள்ளனர்.வடமதுரை கால்நடை டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது: வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். பால் கறவை அதிகமாக இருக்கும் மாடுகளுக்கு வெயில் நேரம் மூச்சு திணறலை ஏற்படுத்தும். மாட்டுக் கொட்டகையிலே தங்க வைக்க வேண்டும். மின் விசிறி வசதி ஏற்படுத்த வாய்ப்பிருந்தால் அமைக்கலாம். அதிகாலை நேரத்திலேயே தண்ணீர் வைத்து விட வேண்டும். மாடுகளுக்கு பச்சைத் தீவனம், வைக்கோல், கோத்திரிக்கோ தீவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை