உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்

மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மழையால் வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை வெகுவாக உயர்ந்து ரூ.120 வரை விற்பனையானது.திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து முருங்கைக்காய்கள் விற்பனைக்கு வருகின்றன. கார்த்திகை பிறப்புக்கு முன்னரே முருங்கைக்காய் சீசன் முடிந்தது. சபரிமலை சீசன் என்பதால் கடைசி பருவத்தில் பயிரிட்டவர்கள் மட்டுமே முருங்கைக்காய் கொண்டு வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.30 வரை விற்கப்பட்ட முருங்கை தற்போது ரூ.120 க்கு விற்பனையானது. விலையை குறைந்தால் லாபம் கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து மட்டுமே முருங்கைக்காய்கள் வருதாகவும், மழையால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும் இந்நிலை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ