இரு மாதமாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்
ஒட்டன்சத்திரம்: உள்ளூர் வரத்து இல்லாததால் நாசிக், சோலாப்பூர் முருங்கைக்காய் வரத்தால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இரண்டு மாதமாக கிலோ ரூ. 100க்கு மேல் விற்பனையாகிறது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்ததால் முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது உள்ளூர் பகுதியில் இருந்து முருங்கை வரத்து முற்றிலும் இல்லை. இதன் காரணமாக நாசிக் , சோலாப்பூர் பகுதிகளில் விளைந்த முருங்கைக்காய் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இவை இரண்டு மாதங்களாக கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. அதே நேரம் சில்லரை விற்பனையில் முருங்கைக்காய் ஒன்று ரூ.20க்கு மேல் விற்பனை ஆகிறது.வியாபாரி ஒருவர் கூறுகையில் உள்ளூர் பகுதியில் இருந்து முருங்கை வரத்து தொடங்கும் போது விலை குறையும் என்றார்.