மேலும் செய்திகள்
கோயில்களில் அஷ்டமி வழிபாடு
01-Sep-2025
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத ஏகாதசி பூஜை விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி பாமா ருக்மணி சமேத வேணுராஜகோபாலசாமி கோயிலிலும் ஏகாதசி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி: புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயிலில் அன்னதானம் நடந்தது. மூலவருக்கு துளசி, மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது. சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தமல்லி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
01-Sep-2025