உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூதாட்டி கொலை: விவசாயி கைது

மூதாட்டி கொலை: விவசாயி கைது

எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே நிலத்தகராறில் மூதாட்டியை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார். வேடசந்துார் சொக்கலிங்கபுரம் மருதப்பிள்ளை மனைவி தெய்வானை 60. நேற்று காலை அம்மாபட்டியை சேர்ந்த மருமகன் சேகரின் தோட்டத்திற்குச் சென்றார். அங்கிருந்த சேகரின் அண்ணன் விவசாயியான சந்தனம் 56, என்பவருடன் நிலப்பிரச்னை தொடர்பாக பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தனம் , மண்வெட்டியால் தாக்கியதில் தெய்வானை சம்பவ இடத்திலேயே இறந்தார். சந்தனத்தை எரியோடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை