மேலும் செய்திகள்
பள்ளி மாணவி சாதனை
23-Feb-2025
வடமதுரை : எரியோடு அருகே 3ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய 65 வயது முதியவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.மொங்குபெத்தாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் 65. இவரது வீடு வழியே பள்ளிக்கு செல்லும் 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனை ஏமாற்றி பாலியல் ரீதியான துன்புறுத்தி வந்தார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்தார். சிறுவனுக்கு காய்ச்சல், உடலில் பாதிப்பு காணவே ஆசிரியை விசாரிக்கையில் முதியவரின் பாலியல் துன்புறுத்தல் விஷயம் தெரிந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் போக்சோவில் தங்கராஜை கைது செய்தனர்.
23-Feb-2025