வேன் மோதி மூதாட்டி பலி
குஜிலியம்பாறை : டி.கூடலுார் ஊராட்சி மடையப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள்70. இவர் தனது பேத்தி சரண்யாவுடன் டி.கூடலுார் கடை வீதிக்கு சென்று விட்டு லந்தக்கோட்டை பிரிவு அருகே ரோட்டை கடக்க நின்றனர். அப்போது கரூர் - திண்டுக்கல் நோக்கி சென்ற கேரளா இடுக்கி தோண்டிமலை ஆனந்தராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேன் மோதியது. முத்தம்மாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விசாரிக்கிறார்.