மேலும் செய்திகள்
22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்
20-Dec-2025
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியம்மாபட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் 20 வயது யானை இறந்து கிடந்தது. இயற்கை மரணம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பழநி வனச்சரக பகுதிகளில் யானை, காட்டு மாடு, மான், பன்றி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. யானையின் தந்தம், கோரைபல் உள்ள பகுதி சேதம் அடைந்த நிலையில் மர்மமான நிலையில் யானை இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் படம் வைரலானது. வன அலுவலர் கோகுல கண்ணன் கூறியதாவது: டிச., 20 பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில் யானை இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. டிச., 21 மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார்மீனா, உதவி வன பாதுகாவலர்கள் கருப்பையா, மனசீர் கலிமா, வன விலங்கு மருத்துவர் முத்து ராமலிங்கம் ஆகியோருடன் சென்றோம். இறந்த யானையின் முக்கிய பாகங்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 20 வயதுள்ள பெண் யானை இயற்கை மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. தந்தத்திற்காக யாரும் கொல்லவில்லை. அங்கேயே யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றார்.
20-Dec-2025