உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாயோடை நீர்த்தேக்கத்தில் முகாமிட்டுள்ள யானைகள்

நாயோடை நீர்த்தேக்கத்தில் முகாமிட்டுள்ள யானைகள்

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி நாயோடைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில் 8 யானைகள் முகாமிட்டுள்ளன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி நாயுடு நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. கன்னிவாடி பேரூராட்சி கசவனம்பட்டி, கோனுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு இப்பகுதி கிணறுகளிலிருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. மொத்த பரப்பில் 40 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. கரை ஷட்டர் பராமரிப்பின்றி எல்லைக்கான குறியீட்டு கற்களும் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.இச்சூழலில் சமீபத்திய மழையால் நீர்தேக்கத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சில வாரங்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களாக 2 குட்டிகளுடன் கூடிய 8 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை