உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சோலார் மின் வேலியை துவம்சம் செய்த யானைகள்; தெத்துப்பட்டியில் மக்காச்சோள சாகுபடி சேதம்

சோலார் மின் வேலியை துவம்சம் செய்த யானைகள்; தெத்துப்பட்டியில் மக்காச்சோள சாகுபடி சேதம்

கன்னிவாடி : திண்டுக்கல் மாவட்டம் தெத்துப்பட்டியில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம் சோலார் மின் வேலியை துவம்சம் செய்து மக்காச்சோளம் சாகுபடியை சேதப்படுத்தியது.கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, எலுமிச்சை, தென்னை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கி உள்ளன. மலைக்கிராமங்கள் மட்டுமின்றி அடிவாரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரம் வரை யானை நடமாட்டம் தாராளமாகி விட்டது. பல்வேறு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விளை நிலங்கள், அவற்றுக்கு செல்லும் வழித்தடங்களிலும் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது.ஆடலூர், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து ஆத்துார் நீர்த்தேக்கம், கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், தருமத்துப்பட்டி கோம்பை, பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி என மலையடிவார விளைநிலங்களில் யானைகள் நடமாட்டம்தற்போது அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஆசைத்தம்பி என்பவரது தோட்டத்தில் மக்காச்சோள சாகுபடியை பாதுகாக்க அமைத்திருந்த சோலார் மின்வேலியை துவம்சம் செய்தன. இதோடு விளைநிலத்தில் புகுந்து பெருமளவு பயிர்களையும் சேதப்படுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை