வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை பயிற்சி வேலை வாய்ப்பு மையம் சார்பில், அரசு துறைகளில் பணியிட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போதே தங்கள் திறமைகளை கண்டறிந்து, அதற்கேற்ப திறன் பயிற்சி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாழ்க்கையின் இலக்குகளை தீர்மானித்து, பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாய்ப்பை தேர்வு செய்வதோடு நின்று விடாமல், அதில் முதன்மையானவர்களாகவும் வெற்றி பெற வேண்டும்' என்றார். ஏற்பாடுகளை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பவித்ரா, மைய இயக்குனர் அனிதா, துணை இயக்குனர் அருணாச்சலம் குழுவினர் செய்திருந்தனர்.