ஆக்கிரமிப்பு அகற்றம்
செந்துறை:செந்துறை அருகே சித்திரைகவுண்டன்பட்டி கிராமத்தில் பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அப்பகுதியில் வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் தனிநபர்கள் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது உறுதியானது. நேற்று போலீசார் பாதுகாப்புடன் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.