உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

ஆத்தூர்: செம்பட்டி பசுமைக்குறள் அமைப்பு சார்பில் எஸ்.பாறைப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய கவுன்சிலர் கண்ணன், ஆசிரியர்கள் சுமதி, போனிபாஸ், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜோஸ்பின்மேரி வரவேற்றார். பருவ கால மாற்றம், பாலிதீன் பயன்பாடு தவிர்ப்பு, குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துதல் அவசியம், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், நீர்நிலைகள் பாதுகாப்பு, பனை விதை நடவு ஆகியவை குறித்து ஒருங்கிணைப்பாளர் ராமு பேசினார். மாணவர்களுக்கு நெல்லி மரக்கன்று, மஞ்சப்பை, திருக்குறள் புத்தகம், திருக்குறள் வினா விடை தொகுப்பு, மாணவர் பட்டம் பதிப்பு, எழுது பொருட்கள் வழங்கப் பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் சோலைமுருகன், கிருஷ்ணபாண்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை