உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

திண்டுக்கல்;திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரியில் நடந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயவுதவிக்குழுவினரின் கல்லுாரிச் சந்தை கண்காட்சி நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 9,688, நகர்ப்புற பகுதியில் 4,192 என மொத்தம் 13,880 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன, அதில் 1,55,780 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கு வழிவகை ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுக்கு 5 விற்பனை சந்தைகள் நடத்தப்படுகின்றன. அதற்காக கல்லுாரிகளில் கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, கல்லுாரி சந்தை விற்பனை கண்காட்சி திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்பட 30 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி படுத்தினர். பேன்சி ரகங்கள், கைவினைப் பொருட்கள், சின்னாளப்பட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் நகைகள், போர்வைகள், பெட்சீட், தலையணை உரைகள், மூலிகை சோப்பு போன்ற பொருட்களை விற்பனைக்காக அரங்குகளில் காட்சிப்படுத்தினர். கல்லூரி மாணவிகள் மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த உற்பத்தி பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த சுப்பத்தாய் கூறியதாவது : மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவதற்கு வசதியாக இதுபோன்ற கல்லுாரி சந்தை விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்குள்ள அரங்குகளில் எங்கள் பொருட்களை விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்களே தயாரித்த சோப்பு உள்ளிட்ட பொருட்களை காட்சிபடுத்தியுள்ளோம். மாணவிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.மற்றொரு குழுவைச் சேர்ந்த பழனியம்மாள் கூறியதாவது : இது போன்ற கல்லுாரிச் சந்தை எங்களின் பொருட்களை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வசதியாக இருக்கிறது. வருமானம் அதிகரிக்கிறது. எங்கள் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொருள்கள் விற்பனை செய்து வருகிறோம். அதனை இங்கு விற்பனைக்கு வைத்துள்ளோம் என்றார்.மாணவி தவமணி கூறியதாவது : கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சியில் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. கவரும் வகையில் அழகான டிசைன்களில் அழகு சாதன பொருட்கள் உள்ளன. பேன்சி ரகங்கள், ஆரோக்கியத்தை தரும் மூலிகை சோப்பு, அழகு சாதன பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ