மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
24-Sep-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி சுய உதவிப்பிரிவு தமிழ்துறை , திண்டுக்கல் இலக்கியக் களம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அறிவை விரிவு செய் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.ஜி.டி.என்., கல்லுாரியில் நடந்த இதற்கு இலக்கியக்கள உதவித்தலைவர் கோவிந்தராஜூ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். கல்லுாரி குழும தாளாளர் ரெத்தினம் முன்னிலை வகித்தார். இயக்குநர் துரை, கல்வி இயக்குநர் மார்கண்டேயன், சுய உதவிப்பிரிவின் துணை முதல்வர் நடராஜன், ஆலோசகர் ராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் மதிவாணன் ,இலக்கியக்கள பொருளாளர் சிவபாலன் பேசினர். கோவை அவினாசிலிங்கம் உதவிப் பேராசிரியர் கவிதாவை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி அறிமுகம் செய்தார். தமிழ்துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.
24-Sep-2024