மேலும் செய்திகள்
காட்டு யானை ஆக்ரோஷம் : அச்சத்தில் பொதுமக்கள்
01-Nov-2025
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு பகுதியில் நேற்று மதியம் இரட்டை வெடிச்சத்தம் கேட்டது. அதிர்வுடன் காணப்பட்டதால் கால்நடைகள் அலறியடித்து ஓடின. வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு அவ்வப்போது பகல் நேரங்களில் பயங்கர வெடிச்சத்தம் கேட்பது 8 ஆண்டுகளாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்பதை உணர்ந்தாலும் 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில் கேட்கிறது. பல நேரங்களில் கடும் அதிர்வும் உணரப்படுகிறது. இதனால் பழமையான வீடுகளில் வசிப்போரிடம் அச்சம் ஏற்படுகிறது. நேற்று மதியம் 3:28 மணிக்கு இரட்டை வெடிச்சத்தம் கேட்டது. வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிர்வும் உணரப்பட்டது. கால்நடைகள் அலறியடித்து ஓடின. அதிர்வுடன் கூடிய வெடிச்சத்தம் கேட்பது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்கி உள்ளது.
01-Nov-2025