உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்

உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்

முறையாக நிறுத்துங்கதிண்டுக்கல் சாலை ரோட்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வங்கிக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.............--------மின்கம்ப உச்சிவரை செடிகள்வடமதுரை சிட்டம்பட்டியில் சுகாதார வளாகம் அருகில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சிவரை செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதில் ஏறும் தேவாங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனை மின்வாரியத்தினர் அகற்ற வேண்டும். -செந்தில்நாதன், வடமதுரை...........--------சாலையை ஆக்கிரமித்து சந்தைகோபால்பட்டியில் சனிக்கிழமை ஆடு,கோழி சந்தை சாலையை ஆக்கிரமித்து நடக்கிறது. பலநுாறு பேர் சாலையை ஆக்கிரமித்து கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடக்க வாய்ப்புள்ளது. சந்தையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். தனபால், வீரசின்னம்பட்டி.............---------சேதத்தில் மின் இயக்கி பெட்டிகொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு மின் இயக்கி பெட்டி சேதமடைந்து விபத்து ஏற்படுவதாக உள்ளது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், கொடைக்கானல்...................----------கலெக்டர் அலுவலகத்தில் குப்பைதிண்டுக்கல் கலெக்டர் அலுவலக பூங்காவில் மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகள் குவிந்து உள்ளது .இனால் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது. குவித்து வைக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும். ரவிகுமார், செட்டிநாயக்கன்பட்டி................-----------ரோட்டில் கோழி கழிவுகள்திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது .வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ரோடு வரை சிதறி கிடப்பதால் இதனை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ், திண்டுக்கல்..................-----------கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக் கேடுதிண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது . கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பிகா, திண்டுக்கல்.....................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ