வேளான் பராமரிப்பு முகாம்
திண்டுக்கல்: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விற்பனை, வணிக கட்டட வளாகத்தில் ஜூன் 17ல் நடைபெறும் இம்முகாமில் விவசாயிகள் தனியாரின் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப்பொறியாளர்களுடனும் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி கேள்விகளுக்கு விளக்கம் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.