ரயில் மோதியதில் உடல் சிதறி விவசாயி பலி
சின்னாளபட்டி : அம்பாத்துறை-கொடைரோடு இடையே ரயில் தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எஸ்.ஐ., அருணோதயம் தலைமையிலான திண்டுக்கல் ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். செம்பட்டி அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்த நாகராஜ் 36, என்பது தெரிந்தது. இவர் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள இவரது தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற ரயில் மோதி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.