உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேளாண் நிலங்களில் சீமை கருவேல மரங்களால்... விவசாயிகள் பாதிப்பு: 100 சதவீத மானியத்துடன் அகற்ற அரசு உதவலாமே

வேளாண் நிலங்களில் சீமை கருவேல மரங்களால்... விவசாயிகள் பாதிப்பு: 100 சதவீத மானியத்துடன் அகற்ற அரசு உதவலாமே

தோட்டக்கலை, நஞ்சை, மலை பயிர்கள் என மூன்று வித பயிர்களும் விளையக்கூடிய சிறப்பு பெற்றது திண்டுக்கல் மாவட்டம். வேலையாட்கள் பற்றாக்குறையால் விவசாயிகளில் பலர் வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். தற்போது வேளாண் கருவிகள் மூலம் தாங்களே கூலி ஆட்களாக மாறி விவசாயம் செய்வதற்கு திரும்பி வருகின்றனர். விவசாயத்திற்கு திரும்புபவர்களுக்கு முதல் சவாலாக இருக்கக்கூடியது சீமை கருவேல முட்புதர்கள். மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளே 90 சதவீதம் இருப்பதால் இவற்றை அகற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதை நினைத்து விவசாயத்திற்கு திரும்ப நினைப்பவர்களும் மலைத்துப் போகின்றனர்.சீமை கருவேல முட்களை அகற்றும்போது கிடைக்கும் வேர்களை செங்கல் சூளை உள்ளிட்ட சில நிறுவனங்கள் வாங்கினாலும் அந்த வருமானம் முட்புதர்களை அகற்றுவதற்கு போதுமானதாக இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்ற அரசு மானியம் வழங்கியது. அதன் மூலம் வட்டாரத்திற்கு ஒரு சில விவசாயிகளே பயனடைந்தனர். அதேபோன்று முட்புதர்களை அகற்ற வேளாண் தோட்டக்கலைத் துறை மூலம் 100 சதவீத மானியம் வழங்கினால் பலநுாறு விவசாயிகள் பயனடைவர். இந்த ஆண்டிலும் முட்புதர்களை அகற்றுவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prasad VV
ஜூன் 29, 2025 07:30

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்ற அரசு மானியம் வழங்கியது. அதேபோன்று முட்புதர்களை அகற்ற மீண்டும் 100 சதவீத மானியம் வழங்கினால் விவசாயிகள் பயனடைவர். இந்த ஆண்டிலும் முட்புதர்களை அகற்றுவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும். ஒழுங்காக விவசாயம் செய்தால் ஏன் முட்புதர்கள் வருகின்றன. மானியம் வருடாவருடம் தர முடியுமா... வேலை பார்க்க வேண்டும்.


Mecca Shivan
ஜூன் 29, 2025 06:49

இதைவைத்துதான் ரியல் எஸ்டேட் முதலைகள் விவசாய நிலத்தை மாற்றி மனைகளாக விற்கிறார்கள்.. அரசு எப்படி உதவும். அவர்கள் தானே அரசு ..சதுரம் சதுரமாக விற்பதே அந்த ஜீ தானே


Rajan A
ஜூன் 29, 2025 05:25

பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் ஓன்று சேர்ந்து இதை செய்யலாமே? எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்றால், இவர்கள் ப்ளாட் போட்டு விட்டு வெளியே போக வேண்டியது தான்


முக்கிய வீடியோ