உள்ளூரிலே பொங்கல் தொகுப்பு கரும்பு கொள்முதல்; விவசாயிகள் வலியுறுத்தல்
திண்டுக்கல்: பொங்கலை முன்னிட்டு அரசு பொங்கல் தொகுப்பு வழங்கும் பட்சத்தில் 2023 ஐ போன்றே கரும்புகளை தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திண்டுக்கல்லை சுற்றிய கிராமங்களில் செட்டிநாயக்கன்பட்டி, மயிலாப்பூர், தர்மத்துப்பட்டி, பழநி, நத்தம், வடமதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் கரும்பு விவசாயம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1349 ெஹக்ேடரில் கரும்பு உற்பத்தி இருந்தாலும் இவை பெரும்பாலும் ஆலைகளுக்கு செல்லும் பன்னீர் கரும்பாகவே உள்ளன. நத்தம், சாணார்பட்டி, வடமதுரை பகுதிகளில் மட்டுமே அதிகளவில் பொங்கலுக்கான கரும்புகள் விளைக்கப்பட்டுள்ளன. விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது, முயல், அணில் தொல்லையால் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு பயிர் என்பது குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் 2023 பொங்கல் பண்டிகை போது தமிழக அரசு சார்பில் ரேஷன்கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.இதில் இடம்பெற்ற கரும்பு அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு பொங்கலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் இதுவரை அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அப்படியே வழங்கினால் கரும்பினை வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யாமல் தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது : கரும்பு நன்கு வளர்ந்து 7 அடி உயரம் வரை உள்ளது. 2023ல் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு அதன் தரத்தை பொறுத்து ரூ.350 முதல் ரூ.400 வரை வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வாங்கி சென்றனர். ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் கூடுதல் கூலி கொடுத்து வேலைக்கு ஆட்களை அழைத்து வருவது, உரம் மருந்து விலை உயர்வு காரணமாக ஒரு கட்டு கரும்பு ரூ.500க்கு விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். அதேநேரத்தில் அரசு பொங்கல் தொகுப்பு வழங்கினால் இதில் இடம் பெரும் கரும்புகளை விவசாயிகளிடமே கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.