உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல்:கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை விவசாயிகள் இணைந்து கலையரங்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்தல், அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குதல், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி