தீயணைப்பு துறை ஒத்திகை
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட தீயணைப்பு குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். வடகிழக்கு பருவ மழை காலங்களில் மழை, வெள்ளங்களில் பேரிடர் மீட்பு பணிகள் மூலம் எப்படி மீட்பது , வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கயிறுகட்டி மீட்பது எப்படி என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.