தீத்தடுப்பு ஒத்திகை
ஆயக்குடி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் பழநி ஆயக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள் , தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் முறைகள் தீர்த்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது.