உள்ளூர் செய்திகள்

மீன்பிடி திருவிழா

நத்தம் : நத்தம் அருகே சிறுகுடி-மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அய்யங்கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடந்தது. நத்தம், கோட்டையூர், சாணார்பட்டி, சிறுகுடி, செந்துறை, துவரங்குறிச்சி, சிங்கம்புணரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாரை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை