உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பூக்குழி

மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பூக்குழி

செந்துறை: செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவ்விழாவையொட்டி மார்ச் 16ல் பக்தர்கள் காப்புக்கட்டி 8 நாட்கள் விரதம் தொடங்கினர். விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அக்னிசட்டி, பறவை காவடி, அலகுகுத்தி, கடவுள் வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர்.விரதம் இருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.வேண்டுதல் நிறைவேறியதற்காக கரும்பு தொட்டில், மாவிளக்கு , அங்கப்பிரதட்சணம் , பொங்கல் , கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழியில் விறகு கட்டை , உப்பு மிளகு பொட்டலங்களை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை