கொடையில் காட்டுத் தீ
கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலை கல்லறைமேடு பகுதியில் திடீரென வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. ரேஞ்சர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரோட்டின் ஓரங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய செடி, கொடிகளை அகற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து தீத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.