மேலும் செய்திகள்
தேவர் சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை
09-Sep-2025
திண்டுக்கல் : மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படுவது குறித்து அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் புகைப்படத்தை திண்டுக்கல்லில் பார்வர்ட் பிளாக் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் செப் 6 ம் தேதி பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வலியுறுத்தப்படும் என தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ,திண்டுக்கல் பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் ,திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அவரின் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
09-Sep-2025