உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அறக்கட்டளை துவக்க விழா

 அறக்கட்டளை துவக்க விழா

சின்னாளபட்டி: காந்தி கிராம பல்கலையில் தமிழ்த்துறை சார்பில் பேராசிரியர் வானமாமலை அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் அறம், பொருளாளர் ரமணி, செயற்குழு உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மன்றம் சார்பில் அறக்கட்டளை வைப்பு நிதியாக 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். ஆண்டுதோறும் வானமாமலை அறக்கட்டளை பெயரிலான ஆய்வுகள், சிந்தனைகளை மையமாகக் கொண்ட சொற்பொழிவுகள் நடத்த தீர்மானம் நிறைவேற்றினர். இணை பேராசிரியர்கள் சிதம்பரம், கேசவராஜராஜன், கவுரவ விரிவுரையாளர்கள் சிவா, செல்வகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை