உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காவிடில் உயர் மின் கோபுரம் திட்டத்தை நிறுத்துவோம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் எச்சரிக்கை

நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காவிடில் உயர் மின் கோபுரம் திட்டத்தை நிறுத்துவோம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம்: ''உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்'' என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி எச்சரித்துள்ளார்.ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியிலிருந்து திருப்பூர் மாவட்டம் மைவாடி வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. இவற்றிற்கு பதிலாக புதிதாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களுக்குள் மின்கோபுரங்கள் அமைப்பதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கோழிப்பண்ணை, பால்பண்ணை வீடுகள் அமைக்க முடிவதில்லை. உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலங்களுக்கு மதிப்பு இழப்பு ஏற்படுகிறது. உயர் மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு மார்க்கெட் மதிப்பில் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் இத்திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ