மேலும் செய்திகள்
ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
05-Jul-2025
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை சி.சி., குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகையை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.குஜிலியம்பாறை கரிக்காலியில் செட்டிநாடு சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குடியிருப்பில் மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்க்கும் செந்தில் முருகன் 52, குடியிருந்து வருகிறார். ஜூலை 12 ல் வெளியூர் சென்றவர் 14ல் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த இரு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த நான்கரை பவுன் செயின் திருடு போனது குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர். இதே குடியிருப்பில் 2023 பிப்., 22-ல் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து170 பவுன் நகை ரூ.80 ஆயிரம் ,2025 ஜன.10 ல் ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து, 70 பவுன் நகை,வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது குறிப்பிடதக்கது.
05-Jul-2025