மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
26-Oct-2024
செந்துறை : -நத்தம் செந்துறை அருகே அரவங்குறிச்சி, கொசுகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் சைக்கிள்களை வழங்கினார். தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் கலிபுல்லா,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.வேடசந்துார்: நாகையகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பி.டி.ஓ., க்கள் சரவணன், குமரன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி, தமிழ்ச்செல்வி, ஊராட்சி தலைவர் செந்தில்வடிவு, தி.மு.க., நிர்வாகிகள் ராமச்சந்திரன், கவிதாமுருகன், இளங்கோவன், முத்துக்கிருஷ்ணன், பொன்ராம் பங்கேற்றனர்.
26-Oct-2024