உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

நிலக்கோட்டை, : முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் கரியாம்பட்டி முத்துராஜா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிலுக்குவார் பட்டி ஊராட்சி தலைவர் செல்வி, கரியாம்பட்டி நாட்டாமை தனபாலன், ஊர் முக்கியஸ்தர்கள் மோகன், தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தொடங்கி வைத்தனர். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.வடமதுரை: அய்யலுார் காக்காயன்பட்டியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கருப்பன், செயல் அலுவலர் அன்னலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ