உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தலைமறைவாக இருந்தவர் கைது

 தலைமறைவாக இருந்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குன்னம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜு 46. 2012ல் சிறுமலை பிரிவில் வைத்து மனைவி ராமுத்தாயை கொலை செய்ததாக திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த ராஜு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கோர்ட், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜுவை கேரளா சென்று தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.எஸ்.ஐ. தர்மராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ