| ADDED : டிச 05, 2025 05:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன், பத்ரகாளியம்மன், பழநிரோடு காளியம்மன், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாடிகொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கன்னிவாடி: பவுர்ணமியை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர். அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், எஸ்.பாறைப்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. சாணார்பட்டி : கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பவுர்ணமி யாக பூஜையில் அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வர சித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.