மேலும் செய்திகள்
வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
06-Sep-2025
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரத்தில் காங்., சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் முகமது மீரான், மாவட்ட துணைத்தலைவர் ரகுமான்சேட், நகரத் தலைவர் காளிமுத்து உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழநி: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பழநி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. நகர தலைவர் முத்து விஜயன், மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டனர். இந்திய நிர்மாண சங்கம் சார்பில் பழநி வட்டார சுய உதவி குழுக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Sep-2025